அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் 7 மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கையில் டிரம்ப் முன்னிலையில் தொடர்ந்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6) அதிகாலை நிறைவு பெற்ற நிலையில், உடனடியாக தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை வேகமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 தேர்தல் வாக்குகளை (Electoral votes) எட்ட வேண்டியது அவசியம்.
இந்த நிலையில் தற்போது வரை டெக்சாஸ், ஓஹியோ, மிசோரி, இண்டியானா, கென்டகி உள்ளிட்ட 22 மாகாணங்களில் வெற்றியுடன் 214 தேர்தல் வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
அதேவேளையில் கலிபோர்னியா, கொலரோடோ, இல்லியனாஸ் நியூயார்க் உள்ளிட்ட 12 மாகாணங்களில் வெற்றியுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 179 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் 7 மாகாணங்களின் வாக்கு எண்ணிக்கை மீது கவனம் குவிந்துள்ளது.
இவற்றில் விஸ்கான்சின், நார்த் கரோலினா, அரிசோனா, பென்சில்வேனியா, ஜார்ஜியா மற்றும் மிச்சிகன் ஆகிய 6 மாகாணங்களில் ஹாரிஸை விட டிரம்ப் மெல்லிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
நெவாடாவில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பென்சில்வேனியாவில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்தார். எனினும் சில மணி நேரங்களில் அங்கு டிரம்ப் அதிக வாக்குகளை பெற்று முன்னிலைக்கு வந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஐபிஎல் மெகா ஏலம் : ஜெட்டா நகரை தேர்வு செய்த பிசிசிஐ… காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தல் : மேஜிக் நம்பர் 270… டிரம்ப் 198ல் முன்னிலை!