தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 30) முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை தரம் உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர், “நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் அதன் ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் நிலை, முதல் நிலை, தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை என நான்கு படி நிலைகளை கொண்டுள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு பின்வரும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறது.
இரண்டாம் நிலையில் இருந்து முதல் நிலையாக தரம் உயர்த்தப்படும் நகராட்சிகள்
திருத்தணி, நந்திவரம்,கூடுவாஞ்சேரி, காங்கேயம், திருமுருகன்பூண்டி, வேதாரண்யம், ராமேஸ்வரம், ஜெயங்கொண்டம்.
இரண்டாம் நிலையில் இருந்து முதல் நிலையாக தரம் உயர்த்தப்படும் பேரூராட்சிகள்
இடைக்கழிநாடு, கீழ்குளம், சாயல்குடி
முதல் நிலையில் இருந்து தேர்வு நிலையாக தரம் உயர்த்தப்படும் நகராட்சிகள்
திருவள்ளூர், பூந்தமல்லி, கள்ளக்குறிச்சி, தாராபுரம், திருவாரூர், போடிநாயக்கனூர், தென்காசி.
முதல் நிலையிலிருந்து தேர்வு நிலையாக தரம் உயர்த்தப்படும் பேரூராட்சிகள்
மரக்காணம், தாடிக்கொம்பு, வடமதுரை, செட்டியார்பட்டி, காரியாபட்டி, வாசுதேவநல்லூர், உண்ணாமலைக்கடை.
தேர்வு நிலையில் இருந்து சிறப்பு நிலையாக தரம் உயர்த்தப்படும் நகராட்சிகள்
திருவேற்காடு, விழுப்புரம், மயிலாடுதுறை, தேனி, அல்லிநகரம்
தேர்வு நிலையில் இருந்து சிறப்பு நிலையாக தரம் உயர்த்தப்படும் பேரூராட்சிகள்
மீஞ்சூர், அரூர், ஓமலூர், வேலூர், அந்தியூர், சென்னிமலை, கருமாண்டி, செல்லிபாளையம், கண்ணம்பாளையம், வீரபாண்டி, குறிஞ்சிப்பாடி, மண்ணச்சநல்லூர், நத்தம், நிலக்கோட்டை, பரவை, ஆரல்வாய்மொழி.
இரண்டாம் நிலையில் இருந்து தேர்வு நிலையாக தரம் உயர்த்தப்படும் நகராட்சி பெரம்பலூர்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
பிரியா
‘மணிரத்னம் வேண்டாம் என்றேன்’: பொன்னியின் செல்வன் விழாவில் துரைமுருகன்
பிரதமரிடம் வாழ்த்து பெற்ற ஆஸ்கர் இயக்குனர்!