இன்னைக்கு டீ கடைக்கு நண்பர் ஒருத்தர் கூட போயிருந்தேன்.
எலெக்ஷன் ரிசல்ட் பத்தி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.
நண்பர், “நிதிஷ், சந்திரபாபு நாயுடு, மோடி கூட்டணி முறிய வாய்ப்பு இருக்கான்னு” கேட்டாப்ல…
அதுக்கு நான், “நீங்க வேற நண்பா, நம்ம மோடி ஜி போட்டோ எடுக்கும்போது ரெண்டு பேரையும் தள்ளி விடப்போறாப்ல. அதனாலேயே கூட்டணி முறியப்போகுது. நீங்க வேணும்னா பாருங்கன்னு” சொன்னேன்…
”நிறையவே வாய்ப்பிருக்கு. அடுத்த ஐஞ்சு வருஷம் இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோன்னு” உச் கொட்டுனாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
ரிமோட்டை பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்த்தால் தான்,டி.வி பார்க்கும் திருப்தியே வருகிறது.
புருசன் கூட சண்டை போட்டு புருசனை பழிவாங்க சார்ஜரை 5 நாளா Wife மறைச்சு வச்சிருக்க ஒரு வீடியோ பார்த்தேன். இதே புருசனுங்க லிப்ஸ்டிக்,eye லைனர், காஜல்,பவுடர் டப்பா, சீப்பை தூக்கி ஒழிச்சு வச்சா, உங்க நிலைமை என்ன ஆகும்னு பார்த்துக்கோங்க. தாங்க மாட்டீங்க.
விஜய பிரபாகரன் தோல்வியடையவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார் – பிரேமலதா விஜயகாந்த்
#வெற்றிகரமான தோல்வி
ஏன் எஸ்பி நம்ம லிஸ்ட்ல வர பொண்ணுங்க மட்டும் கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளகுட்டியோட வராளுங்களே என்னவா இருக்கும்
ச ப் பா ணி
இலட்சியங்கள் என்பது தலைமுடி போல.. இளம்வயதில் அதிகமிருக்கும்.வயதாக வயதாக தானாகவே உதிர்ந்துவிடுகிறது.
ஆக்ச்சுவலி அண்ணாமலைக்கு திமுகக்காரங்க நன்றிதானே சொல்லணும். அதிமுக-பாஜக கூட்டணியை சல்லிசல்லியா நொறுக்கிவிட்டு டெபாசிட் வரை போகவெச்ச வேலையைத்தானே செஞ்சிருக்கார்
இல்ல.. நாயுடு நிதீஷ்க்கே இந்த திணறு திணறாரே, பிரேமலதா பையன் மட்டும் ஜெயிச்சுருந்தான்னா ஜி என்ன கதி ஆயிருப்பார்னு நினைச்சேன் சிப்பு வந்துருச்சு.
தொடர்ந்து நடிக்க சுரேஷ் கோபி முடிவு..
எங்க திருச்சூர்லயா..
எவம்லே அது..
நாயுடு – மோடி இப்போ நீ என்ன பன்ற என் சொந்தக்கார பையன் #மகேஷ்பாபு அவனுக்கு Expression King சொல்லி National Award ஒன்னு கொடுக்குற
ச ப் பா ணி
சாக்லெட் சாப்பிட்டால் சொத்தைபல் வரும் என்று அப்பா மகனுக்கும், லட்டு சாப்பிட்டால் சுகர் வரும் என்று மகன் அப்பாவுக்கும் கூறுவதுதான் தலைமுறை இடைவெளி
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை: அகில இந்திய கூடைப்பந்து போட்டி – சென்னை அணி வெற்றி!
‘தமிழ்’ செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று… சுவாரஸ்ய தகவல்கள்!