இன்னைக்கு அப்டேட் குமாருக்கு என்ன லீடிங் அடிக்கனும்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.
அந்த நேரம் பார்த்து டிவில வந்த சமக தலைவர் சரத்குமார், “தமிழ்நாட்டுல இருக்கிற 39 தொகுதியும் சமக வுக்கு சாதகமாக இருக்கு’னு அசால்டா பேட்டி கொடுத்த வீடியோ ஓடுச்சி..
இத கேட்டு நானும் ’யார்ரா நீங்கல்லாம்?’னு சமுத்திர கனி பேசுற டயலாக் மனசுல ஓட… பக்கத்துல இருந்த பரதன் பயங்கரமா சிரிச்சிக்கிட்டு இருக்கான்.
’ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லிடா’னு பேசுன விஜயவே லெப்ட்டுல தட்டிவிட்டு பேசிட்டு இருக்குற சரத்குமாரு விடவா அப்டேட் குமாரு லீடிங் வர போகுது…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வருவாய் எங்கம்மா உயர்ந்திருக்கு
கேஸ் விலையும் , GST வரியும் தாம்மா உயர்ந்திருக்கு
Kirachand
அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி இருக்கும்! – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பெட்ரோல்,டீசல் விலையை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்துத்துவாங்களோ?
mohanram.ko
தனி நபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றமில்லை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வருமானத்தில் மாற்றம் பண்ணாம போனாங்களேன்னு சந்தோஷப்பட்டு, போவியா..
balebalu
சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் : வாரணாசி நீதிமன்றம் அதிரடி
பழனி கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் வழிபட தடை – மதுரை நீதிமன்றம்
Madurai Jinna
பட்ஜெட்ல சொன்ன
எதுவுமே நடக்கல மாமா !
இந்த பட்ஜெட்ல சொன்னதா மாப்ள.?
இல்ல மாமா, போன பட்ஜெட்ல சொன்னது !
சரவணன். 𝓜
மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
எதுவுமே பண்ணலைன்னா அறிக்கை வெள்ளையா தான் இருக்கும் சென்றாயன்..
ஜோக்கர் ஃபீனிக்ஸ்
அதான் மாடில சோலார் பேனல் வச்சிட்டான்ல…
அப்புறம் அவனுக்கு எதுக்கு 300 யூனிட் ஓசியில கரண்டு ??
black cat 2
10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 19 எய்ம்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளன – நிர்மலா சீதாராமன் ..
“ஓ 19 செங்கலா..”
சாணக்கியன்
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு 6 லட்சம் கோடி ஒதுக்கீடு…
எதுக்குடா எலுமிச்சம் பழம் வாங்கவா…
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’இது பாஜகவின் பிரியாவிடை பட்ஜெட்’ : தலைவர்கள் கருத்து!
டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை நோக்கி பாமக… பொதுக்குழு கொடுத்த சிக்னல்!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭🤭