தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. Union Ministry grants Y category
விஜய் கட்சி ஆரம்பித்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார். சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதனால் அவரது பாதுகாப்பு கருதி, மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இந்த Y பிரிவு பாதுகாப்பில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதமேந்திய காவலர்கள் என மொத்தம் 8 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இந்த பாதுகாப்பானது தமிழகத்திற்குள் மட்டும் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.