மழை வெள்ளம் : சென்னை வரும் ராஜ்நாத் சிங்

அரசியல் தமிழகம்

மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை (டிசம்பர் 7) சென்னை வருகிறார்.

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் இன்னும் வடிந்த பாடில்லை. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள், ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை பலரும் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மழை பாதிப்பை சரி செய்ய ரூ.5060 கோடி நிதி வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 6) காலை கடிதம் எழுதினார்.

இந்நிலையில் மழை பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாளை சென்னை வருகிறார்.

டெல்லி அக்பர் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து டெல்லி சர்வதேச விமான நிலையம் வரும் அமைச்சர் ராஜ்நாத்சிங், அங்கிருந்து 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதியம் 12.15 மணிக்குச் சென்னை விமான நிலையம் வருகிறார்.

12.20 மணியிலிருந்து மதியம் 1.10 வரை ஹெலிகாப்டர் மூலம் மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுடன் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

ஆய்வுக்குப் பின் தலைமைச் செயலகம் செல்லும் ராஜ்நாத்சிங் 1.20 மணி முதல் 1.30 வரை முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதன்பிறகு தலைமை செயலகத்திலிருந்து சாலை வழியாகச் சென்னை விமான நிலையம் செல்லும் அமைச்சர் ராஜ்நாத்சிங், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

IPL2024: கம்மின்ஸ், ஷர்துலை விட இவரு பெட்டர்… ஆனா சென்னை இதை செய்வாங்களா?

“புத்தகங்களை பாதுகாக்க போராடுகிறோம்”: எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் கவலை!

“மழையால் சேதமடைந்த புத்தகங்கள்” : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உருக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0