அமித்ஷா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்த அமித்ஷா மீது 4 பிரிவுகளின் கீழ் கர்நாடகா போலீசார் இன்று (ஏப்ரல் 27) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர், “காங்கிரஸுக்கு தவறுதலாக மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்தால், அது கர்நாடகாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல், கலவரத்திற்கு வழிவகுத்துவிடும். வாரிசு அரசியலுக்கு இட்டுச் செல்லும்.” என்றார்.

மேலும் சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது, அனைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) உறுப்பினர்களை விடுவித்தார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைய உள்ள நிலையில், அக்கட்சி தலைவர்கள் விரக்தியில் பேசி வருகின்றனர். அதற்காக பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

இந்நிலையில் வெறுப்பு, கலவரம் உண்டாக்கும் விதத்தில் அமித் ஷா பேசியுள்ளதாக கூறி பெங்களூரு காவல்நிலையத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் டிகே சிவகுமார், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா டாக்டர் பரமேஷ்வர் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அமித் ஷா மீது, 153 ஏ, 171 ஜி, 505(2) மற்றும் 123 என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

திட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: முதல்வர் அறிவுரை!

மாவீரன் படத்திற்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?: தயாரிப்பாளர் விளக்கம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts