பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 11 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தருகிறார்.
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில், மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டம்தோறும் பாஜக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், வேலூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஜூன் 11 ஆம் தேதி நடக்க உள்ளது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். டெல்லியில் இருந்து விமான மார்க்கமாக சென்னை வரும் அவர் பின்னர், ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார்.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே இருப்பதால் அமித் ஷாவின் தற்போதைய தமிழக பயணம் அரசியல் களத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
மேலும், தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, பொதுக்கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, துணைத் தலைவர் நரேந்திரன், மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அமித் ஷா பங்கேற்கும் கூட்டம் வேலூர் அடுத்த கந்தனேரியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மதுபாட்டில்களில் சிறுமியின் படம்: விஜயகாந்த் வலியுறுத்தல்!
செக்ஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வீடன் விளக்கம்!
9 ஆண்டு சாதனையா ஐயோ வேதனை., gas, பெட்ரோல், அத்தியாவாசி பொருள்களின் விலை இதை பற்றி பேசு, உன் சாதனை என்னென்னு புரியும்.