கலைஞரின் கடல் பேனா:மத்திய அரசு எழுப்பும் கேள்விகள்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடலின் நடுவே பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறைக்கு தமிழக அரசு சமீபத்தில் கடிதம் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மீனவர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பல்வேறு கேள்விகளை எழுப்பி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு இன்று (அக்டோபர் 5) உத்தரவிட்டுள்ளது.

அதில் “பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதா?

நினைவுச் சின்னத்தை பார்வையிட வரக்கூடிய பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உள்ளதா?”

சுனாமி, புயல் போன்ற பேரிடர் காலங்களில் அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

பேனா நினைவுச் சின்னத்தால் சுற்றி இருக்கக்கூடிய பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

நினைவு சின்னம் அமைப்பதால் அங்கு மீன்பிடிக்க கூடிய மீனவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், பாதுகாப்பு அம்சங்கள் என்ன?”

இவற்றையெல்லாம் குறிப்பிட்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

ஒரு நாள் சம்பளம்: கறார் சத்யராஜ் பகீர் ஷங்கர்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts