arjun ram mehgwal as law minister

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இலாகா மாற்றம்!

அரசியல் இந்தியா

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரன் ரிஜிஜு புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் பிகானேர் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் ராம் மேவால் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் கொலிஜியம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கிரண் ரிஜிஜு பேசி வந்த நிலையில், அமைச்சருடைய கருத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி பல நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

2வது நாளாக தங்கம் விலை குறைந்தது!

வலிமையான எழுத்து தான் ஒரு படத்தின் வெற்றி : இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

புலனாய்வு த்ரில்லர் ஜானரில் ‘போர் தொழில்’

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *