“விதிமீறி கட்டிடங்கள் கட்டினால்”: அமைச்சர் எச்சரிக்கை!

அரசியல்

தமிழகத்தில் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்துத் தள்ளப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கட்டிட அனுமதி பெறும் நடவடிக்கைக்காக பில்டர்ஸ் அசோசியேசன், பொறியாளர்கள் சங்கம், ஆர்கிடெக்ட், பள்ளி கல்லூரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரிடம் கருத்துக்களை கேட்க இருக்கின்றோம். 

விதிமுறைகளை பின்பற்றுவதில் நடைமுறை  சிக்கல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக அவர்களிடம் கருத்துக்களை பெற்று துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இனிமேல் வரப்போகும் எந்த கட்டிடமும் வரைபட அனுமதி இல்லாமல் கட்டக்கூடாது என்பதை கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது கட்டிட பொறியாளர்களின் பொறுப்பு. கட்டிட உரிமையாளர்களை விட இவர்களுக்கு தான் இந்த பொறுப்பு உள்ளது.

கட்டிடம் கட்ட வரைபட அனுமதி தேவை என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை, இது குறித்து அவர்கள் கவலைப்படுவதும் இல்லை. கட்டிட வரைபட அனுமதி மிக முக்கியமானது. இது பொது மக்களுக்கு பாதுகாப்பானது என்பதை அவர்கள் உணர வேண்டும்

அனுமதி பெறாத கட்டிடங்கள் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிமுறைகளை செய்திருக்கின்றோம். இதுகுறித்து பொதுமக்களிடமும் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

ஏற்கனவே உள்ள விதிமீறிய கட்டுமானங்கள் குறித்து நீதிமன்றத்தில் இரண்டு மூன்று முறை உத்தரவுகள் வந்திருக்கின்றன. இதையெல்லாம் மனதில் வைத்து மீண்டும் நீதிமன்றத்தை அணுகி, இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று நியாயமான தீர்வை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் ஒரு நபர் கூட பாதிக்கப்படக்கூடாது என கருதுகின்றோம். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்களை கேட்டு அவர் மூலம் இதை எல்லாம் ஆய்வு செய்து அதன் பின்னர் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ய இருக்கின்றோம்.

அதே நேரம் இனிமேல் விதி மீறிய கட்டிடங்கள் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.  அவ்வாறு கட்டப்பட்டால் அதை மூடுவதற்கும் இடித்து அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கலை.ரா

“அப்படியா? நல்லாயிருக்கு”: எடப்பாடி கருத்துக்கு உதயநிதி ரியாக்‌ஷன்!

பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள்: ஜே.என்.யூ-வில் புதிய கட்டுப்பாடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *