இங்கிலாந்தில் பணிபுரிய வரும் இந்தியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3000 விசாக்கள் வழங்க அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இன்று (நவம்பர் 16) அனுமதி அளித்துள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று (நவம்பர் 16) இங்கிலாந்து, இந்தியா இளம் வல்லுநர்கள் விசா திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பட்டப்படிப்பு படித்த இந்திய குடிமக்கள் இங்கிலாந்து வந்து இரண்டு ஆண்டுகள் வரை வசிக்கவும் வேலை செய்யவும் வழிவகை செய்யும் வகையில் 3000 விசாக்கள் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று அவரை பிரதமர் மோடி சந்தித்தார்.
ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து அரசு தரப்பில் கூறும்போது, ” இந்தியாவுடனான நமது இரு தரப்பு உறவு மற்றும் பொருளாதாரங்களை வலுப்படுத்தவும், இந்தோ, பசிபிக் பிராந்தியத்துடன் வலுவான தொடர்புகளை உருவாக்குவதற்காகவும் இந்த திட்டம் ஒரு குறிப்பிடத் தகுந்த துவக்கமாக இருக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: ஜி-20 மாநாட்டில் மோடி
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!