காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது.
இது டெல்டாக்காரராக முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி.” என்று பதிவிட்டுள்ளார்.
இதனை ஏப்ரல் 5ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை சுட்டிக்காட்டி #விவசாயம்காப்போம் என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட் செய்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
நிலக்கரிச் சுரங்க ஏலம்: டெல்டா பகுதிகளை நீக்கியது மத்திய அரசு