மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்திலும், நேற்று (ஜனவரி 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
இந்தநிலையில், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியின் மகன் இன்பநிதி இந்த போட்டியை காண வந்துள்ளார். பார்வையாளர்கள் மாடத்தில் உதயநிதிக்கு அருகே அமர்ந்து போட்டியை கண்டுகளித்து வருகிறார் இன்பநிதி.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 5,786 காளைகளும் 1,698 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். மருத்துவப் பரிசோதனை, எடை சரிபார்ப்புக்கு பின்னர் மாடுபிடி வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், பிடிபடாத சிறந்த காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தை மாத நட்சத்திர பலன்கள்: திருவோணம்
கத்தியில்லாமல் போராடிய ஹீரோ…. குடும்பத்தை சைஃப் அலிகான் காப்பாற்றியது எப்படி?