அமைச்சர் உதயநிதி சட்டை பட்டனை கழட்டிவிட்டு போலீசாருக்கு சல்யூட் செய்த புகைப்படத்தைப் பகிர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மார்ச் 14, 15 ஆகிய தேதிகளில் அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
மயிலாடுதுறையில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “2020ல் என்னை கைது செய்த காவல்துறை இப்போது பாதுகாப்பு வழங்குகிறது” என கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி காவல்துறை அதிகாரிக்கு, சட்டை பட்டனைக் கழட்டிவிட்டவாறு மரியாதை செலுத்தும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சட்டை பட்டன் கழட்டி விட்டு அதில் கூலிங் கிலாசைத் தொங்க விட்டுக் காவல் துறைக்குப் பதில் மரியாதை செய்யும் திராவிட விடியல் யூத் மந்திரி” என்று விமர்சித்துள்ளார்.
அரசு நிகழ்ச்சிக்குச் செல்லும் போது அமைச்சர்களுக்கு காவல்துறையினர் சல்யூட் செய்து மரியாதை செலுத்தும்போது, அமைச்சர்களும் பதிலுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அப்படி வணக்கம் செலுத்தும்போது அமைச்சர் உதயநிதி சட்டை பட்டனை கழட்டிவிட்டு, கூலிங் கிளாஸ் மாட்டியிருந்தது பேசுபொருளாகியுள்ளது.
பிரியா
பிச்சைக்காரன் 2 வெளியாவதில் சிக்கல்!
அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிய ரோபோ சங்கர்! என்னாச்சு?