உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கிக் கணக்கை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில், நேற்று திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
இந்நிலையில், உதயநிதி அறக்கட்டளை வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை முடக்கியிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட ட்விட்டர் பதில், “ 25/5/2023 வரை தமிழ்நாடு முழுவதும் ரூ. 36.3 கோடி மதிப்பிலான பல்வேறு அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கூடுதலாக தற்போது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.34.7 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. கல்லல் குழும வழக்கு விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
பிரியா
லஞ்சம் பெற்ற அதிகாரிகள்: பாய்ந்தது வழக்கு!