புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதவியுடன் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு வரவிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜனவரி 9) காலை 10 மணிக்கு கூடுகிறது.
இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள்.
தொடர்ந்து, ஆளுநருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது.
ஆளுநர் உள்ளே வந்ததும் சபாநாயகர் இருக்கையில் அமர்வார். அவருக்கு அருகே சபாநாயகர் தனி இருக்கையில் அமருவார். காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.
ஆளுநர் மற்றும் சபாநாயகரின் உரை முழுவதும் இணையதளத்தில் நேரலை செய்யப்பட உள்ளது. உரையை சபாநாயகர் வாசித்து முடிந்ததும் அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
அதன் பின்னர் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்பட உள்ளது.
புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதவியுடன் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு வரவிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் 10-வது இடம் அளிக்கப்பட்டுள்ளதால், சட்டசபையில் அமைச்சர்களுக்கான முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: கடுப்பான டாடா குழும தலைவர்
சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்!