திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி இன்று (டிசம்பர் 14) காலை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சராகப் பொறுப்பேற்கும் நிகழ்வுக்காகக் காலை முதலே ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு அமைச்சர்களும், எம்.பி.க்களும் வருகை தந்தனர்.
காலை 9 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
சரியாக காலை 9.30 மணிக்கு ஆளுநர் விழா மேடைக்கு வருகை தந்தார். இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
பின்னர், “உதயநிதி ஸ்டாலின் எனும்,
நான் சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றையும் கொண்டிருப்பேன் என்றும் நாட்டின் ஒப்பில்லாத முழுமுதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,
தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாக உளச்சான்றின் படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு இணங்க அச்சமும் ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு வெறுப்பை விலக்கி பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் நேர்மையானதைச் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்” என உதயநிதி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் உறுதிமொழி ரகசிய படிவத்தில் ஆளுநரும், உதயநிதி ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.
பிரியா
முரசொலியில் ஒரு விளம்பரமும் இல்லை: உதயாவின் புதிய அணுகுமுறை!