ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி முதலில் எதிர்த்தார். இப்போது பேட்டி கூட கொடுக்காமல் வெறும் கடிதம் மூலமாக ஆதரவு தெரிவித்துள்ளார். அதை கொண்டு வந்து மத்திய அரசு என்ன சாதிக்கப் போகிறார்கள். சமீபத்தில் தான் கர்நாடகாவில் தேர்தல் முடிந்தது. ஆட்சிகள் கவிழாதா. இது போன்ற நிறைய கேள்விகள் உள்ளது. ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள்.
கொள்கைக்காக உருவாக்கப்பட்டது தான் திமுக. ஆட்சி அதற்கு அடுத்தது தான். அதைவிட முக்கியம் சமூக நீதி. எனவே அது தொடர்பாக தொடர்ந்து பேசுவேன். அண்ணா, பெரியார் பேசாததை நான் பேசவில்லை. அதைவிட முக்கியம் 2024 தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது. மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. சர்ச்சுகள் இடிக்கப்பட்டுள்ளது. முதலில் அதைப் பற்றி பேசுவோம் அதன் பிறகு சனாதனத்தை பற்றி பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராமலிங்கம்
டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
Comments are closed.