சனாதனத்தை எதிர்ப்பதால் ஆட்சியே போனாலும் கவலையில்லை என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை புதிய கல்லூரி கலையரங்கத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தை எதிர்ப்பதால் ஆட்சியேபோனாலும் எங்களுக்கு கவலையில்லை. கொள்கைக்காக துணை நிற்போம். சனாதன தர்மத்தை எதிர்த்து அறிஞர் அண்ணா அதிகமாக பேசியிருக்கிறார். சனாதனம் குறித்து அதிமுக தலைவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும்” என்றவரிடம்
ஜி20 மாநாட்டில் பிரதமர் பெயர் பலகையில் பாரத் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “9 வருடத்தில் நாட்டை மாற்றி காட்டுவேன் என்று பிரதமர் கூறினார். அதே போல சொன்னதை செய்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது” – ஜி20 மாநாட்டில் பிரகடனம்!
வாக்காளர் பட்டியல், அரசியல் நிலவரம் : மகளிரணிக்கு விஜய் உத்தரவு!