வருமான வரித்துறை சோதனையின் மூலம் திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்.எஸ்.எஸ் சார்பாக நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினரும் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக மீது பாஜக எப்பொழுதும் குற்றச்சாட்டு சுமத்திக்கொண்டே தான் இருப்பார்கள். நாங்கள் அதனை தகர்த்துவிட்டு எங்கள் வேலைகளை தொடர்ந்து பார்த்து கொண்டே தான் இருப்போம். வருமான வரித்துறை சோதனை எப்பொழுதுமே நடக்கக்கூடியது தான். அது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இதுவரை யார் மீதாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறதா யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா. திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது” என்றார்.
பிடிஆர் ஆடியோ குறித்து கேட்டபோது, “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக நிறைய ஆடியோக்கள் வெளிவந்தது. அதுகுறித்து முதலில் அவரிடம் கேள்வி எழுப்புங்கள்” என்று தெரிவித்தார்
செல்வம்
”காதலுக்கு மரியாதை”: நடிகை கஸ்தூரிக்கு ரஹ்மான் பதில்!