சனாதன மாநாட்டில் பங்கேற்றது ஏன் என்பது தொடர்பான விளக்கத்தை 4 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 22) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றதன் மூலம் அரசமைப்பு சாசனத்தின் பிரிவுகள் மீறப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சிபிஐ விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று ஜெகநாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிருதா போஸ், பெலாஸ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் “இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை நீங்கள் ஏன் நாடக்கூடாது. காவல் நிலையம் போல் உச்சநீதிமன்றத்தை நினைத்து கொள்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், “அமைச்சர் பதவியில் இருக்கும் இரண்டு பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார் அமைச்சர் ஒருவர் வெறுப்பு பேச்சை ஊக்குவிக்கிறார். அவர் அரசின் பிரதிநிதி. தனி நபர் அல்ல. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தான் தலையிட வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது ஏன்? சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தது ஏன்? என்பது தொடர்பான விளக்கத்தை 4 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஸ்டாலின் சொல்படி கோட்டை முற்றுகை : பகுதிநேர ஆசிரியர் சங்கம்!
நெல்லை – சென்னை வந்தே பாரத்: சோதனை ஓட்டம் தொடங்கியது!
மார்க் ஆண்டனி: விஷாலுக்கு எஸ். ஜே. சூர்யா வைத்த கோரிக்கை!
ரூ.25 கோடி லாட்டரி: ஜாக்பாட் அடித்தது யாருக்கு?