அந்த அறிவு கூட இல்லை அந்தாளுக்கு… ஆதவ் அர்ஜூனாவுக்கு உதயநிதி பதிலடி!

பிறப்பால் இனி ஒருவர் முதல்வராகக் கூடாது என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியதற்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் முதல்வர் ஆகிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 7) பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்த ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 6) நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “தமிழகத்தில் 2026 தேர்தலில் மன்னராட்சிக்கு இடமில்லை. பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது” என்று தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய், “இறுமாப்போடு 200 வெல்வோம் என்று சொல்பவர்களை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்” என்று ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில், வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், விஜய் கலந்துகொண்ட புத்தக வெளியீட்டு விழாவில் தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக ஆதவ் அர்ஜூனா பேசியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த உதயநிதி, “நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை” என்றார்.

தொடர்ந்து, பிறப்பால் முதல்வர்கள் ஆகக்கூடாது என்ற ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் முதல்வர் ஆகிறோம். அந்த அறிவு கூட அவருக்கு இல்லையே” என்று கோபமாக பேட்டியளித்துவிட்டு சென்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணாமலை Vs ஆர்.எஸ்.பாரதி: தீவிரமாகும் மோதல்!

ஆம்னி பேருந்துகள்: விதிகளை மீறினால் சிறை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts