சென்னையில் இன்று (நவம்பர் 26) நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படலாம் என்று நவம்பர் 24-ஆம் தேதி திமுக மாசெக்கள் கூட்டத்தில் உதயநிதி: காரணம் என்ன? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டோம்.
அதன்படி இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பது இதுதான் முதல்முறை. இளைஞரணி மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வரும் முறை, மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இளைஞரணி நிர்வாகிகளுக்காக நடைபெற்று வரும் ஏற்பாடுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் பேசினார். மேலும், மாநாட்டை சிறப்பாக நடத்த மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டை சிறப்பாக நடத்தவும் இளைஞர்களுக்கு திராவிட கொள்கையை கொண்டு சேர்க்கும் விதமாக மாநாடு அமைய வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின் போட்ட உத்தரவு!
கனமழை: 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் பாதிப்பு!