திமுகவின் இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு இன்று (நவம்பர் 15) கன்னியாகுமரியில் பைக் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுகவின் இளைஞரணி மாநாடு வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டைப் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த மாநாட்டை முன்னிட்டு கன்னியாகுமரியில் இன்று திமுக இளைஞரணி இருசக்கர வாகன பேரணி தொடங்கப்பட்டது.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே, ராயல் என்ஃபீல்டு வாகனத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 13 நாட்கள் இந்த பேரணி நடைபெற இருக்கிறது. 234 தொகுதிகளிலும் 8,647 கிலோமீட்டர் திமுக இளைஞரணியினர் பயணிக்கவுள்ளனர். இதன் ஒரு பகுதியாக 504 மையங்களில் பிரச்சாரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேரணி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்.
மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட திமுக ரைடர்ஸ் வாகனப் பேரணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாசிஸ்ட்டுகளை விரட்டி – மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வலுபெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: 9 மாவட்டங்களில் கனமழை !