வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் 5 பேர் அடங்கிய குழுவை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 19) அறிவித்துள்ளார்.
அதன் விவரம்:
கே.என்.நேரு
ஆர்.எஸ்.பாரதி
எ.வ.வேலு
தங்கம் தென்னரசு
உதயநிதி ஸ்டாலின்
இந்த குழுவில் அமைச்சர் பதவியில் அல்லாத கட்சியின் மூத்த தலைவரும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கனிமொழி தலைமையில் மக்களவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு!
திடீரென்று உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
நான் நேரில் பார்த்த “ஜாவா சுந்தரேசன்” மீனாட்சி சவுத்ரி: கலாய்த்த ஆர்.ஜே.பாலாஜி