“எனது அமைச்சரவை பொறுப்புகள் மாற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தான் முடிவெடுப்பார்” என்று திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் 45-ஆவது ஆண்டு தொடக்கவிழா சென்னை அன்பகத்தில் இன்று (ஜூலை 20) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் வருகின்ற கிசுகிசுக்கள், வதந்திகளை எல்லாம் படித்துவிட்டு வந்து நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கு பேசியிருக்கிறீர்கள்.
என்னுடைய மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு இளைஞரணி செயலாளர் என்ற பொறுப்பு தான். எனவே எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் உங்களின் அமைச்சரவை பொறுப்புகள் மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்று உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
இதற்கு பதிலளித்த உதயநிதி, “அதுகுறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எனக்கு துணை முதல்வர் பதவியா? – உதயநிதி விளக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை: அரசியல்வாதிகள் பின்னணியில் ரவுடிகள்… நாராயணன் திருப்பதி ஓபன் டாக்!