udhayanidhi stalin birthday

முதல்வரை போல் உதயநிதிக்கும் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள்!

அரசியல்

தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். udhayanidhi stalin birthday arrangements

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 46வது பிறந்தநாளை இன்று (நவம்பர் 27) கொண்டாடுகிறார்.

அவருக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அடுத்த மாதம் நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு குறித்து விவாதிப்பதற்காக இளைஞரணி செயலாளர் என்ற அடிப்படையில் நேற்று நடைபெற்ற மா.செக்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக கலந்து கொண்டார்.

அந்த மீட்டிங் ஹாலிலேயே மாவட்டச் செயலாளர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள்.

மீட்டிங் முடிந்து உதயநிதி ஸ்டாலின் காரில் கிளம்பிய உடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக அமைச்சர்கள் பின் தொடர்ந்து உதயநிதியின் வீட்டிற்கே சென்றுவிட்டனர்.

அதன்படி அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், அமைச்சர் சக்கரபாணி, தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர் டி ஆர் பி ராஜா, அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது அமைச்சர்கள் குடியிருப்பு இருக்கக் கூடிய பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அந்த இல்லத்தில் தான் உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறார்.

குறிஞ்சி இல்லத்திற்கு முன்பு தடுப்புகளை அமைத்து நேற்று இரவு முதலே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் வரை பல்வேறு தரப்பினரும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருகிறார்கள் என்பதால் நேற்றே அதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எப்படி பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்வார்களோ, அதே போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் இருவரையும் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

Bigg Boss 7 Day 56: “என்ன உங்க டீம்ல சேர்க்காதீங்க”… பூர்ணிமாவை ரோஸ்ட் செய்த கமல்ஹாசன்

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இணைந்த மெட்ராஸ் சாப்பர்ஸ்!

udhayanidhi stalin birthday arrangements

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *