முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கின்றாராம். மகன் அமைச்சராவது எல்லா அப்பாக்களுக்கும் மகிழ்ச்சியைத்தானே தரும்.
மார்கழி மாதத்துக்குள் மகன் அமைச்சரானால் எதிர்காலம் ரொம்ப ரொம்ப சிறப்பாக இருக்கும் என எல்லா சோதிடர்களும் சொன்னால் ஆன்மீக வாதியான அம்மா சும்மா இருப்பாரா?
முதல்வரான கணவரால் மனைவியின் அழுத்தத்திலிருந்து தப்பிக்கத்தான் முடியுமா?
நல்லநாள் வரும் புதன்கிழமை என்பதால் வேகவேகமாக வேலையில் இறங்கிவிட்டார் முதல்வர்.
தனக்கு ரொம்பவும் பிடித்தமானவர்களிடம் மகன் 14ம்தேதி அமைச்சராவதை சொல்லி விழாவிற்கு வரவேண்டும் என்கிறார்.
400 பேருக்கு அழைப்பு தயாராகிக்கொண்டிருப்பதாக தகவல்.
உதயநிதியும் தன் நண்பர்களிடம் முதல்வரிடம் உள்ள சிறப்பு செயல் திட்ட அமலாக்கம், மெய்யநாதனிடம் உள்ள விளையாட்டு, கீதா ஜீவனிடம் உள்ள மகளிர் மேம்பாட்டுத்துறைகளுக்கு அமைச்சராகிறேன் என பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கிறார்.
மகனை அமைச்சராக்கும் ஸ்டாலின் சில அமைச்சரவை மாற்றங்களையும் செய்ய இருக்கிறாராம்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பெரியகருப்பன் வசம் இருக்கும் ஊரக வளர்ச்சித்துறை மாற்றப்பட இருக்கிறது. கூட்டுறவுத்துறை பெரியகருப்பனுக்காம்.

ராமச்சந்திரனிடம் உள்ள வனத்துறை மதிவேந்தனுக்கும் மதிவேந்தனிடம் உள்ள சுற்றுலாத்துறை ராமச்சந்திரனுக்கும் மாற்றப்பட உள்ளது.

முத்துசாமியிடம் உள்ள சிஎம்டிஏ அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு கூடுதலாக வழங்கப்படலாம்.

இப்படியான இலாகா மாற்றங்களுடன் தன் மகன் உதயநிதியை தனக்கு பக்கபலமாக செயல்பட அமைச்சரைவையில் சேர்த்துக்கொள்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
“அது மேயர் பிரியாவின் துணிச்சல்”: சேகர்பாபு