திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை மீண்டும் நியமித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (நவம்பர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். துணைச் செயலாளர்களாக ஜோயல், ரகுபதி, இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ராஜா (எ) பிரதீப்ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுக மகளிரணி தலைவியாக விஜயா தாயன்பன், செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமார், மகளிர் அணி துணைச் செயலாளர்களாக பவானி ராஜேந்திரன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் தொண்டர் அணிச் செயலாளராக நாமக்கல் ப. ராணியும் இணைச்செயலாளராக தமிழரசி ரவிக்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்களாக சத்யா பழனிகுமார், ஜெ.ரேகா பிரியதர்ஷினி , விஜிலா சத்யானந்த் மற்றும் மாலதி நாகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் சுஜாதா, கே.ராணி, அமலு, மாலதி நாராயணசாமி, மோ.தேன்மொழி, உமா மகேஷ்வரி மற்றும் ஜெசி பொன்ராணி ஆகியோர் மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பி.எம்.யாழினி , ரத்னா லோகேஸ்வரன், அ.ரியா ஆகியோர் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிர் அணி ஆலோசனைக் குழுவில் காஞ்சனா கமலாநாதன், சங்கரி நாராயணன், காரல் மார்க்ஸ், சிம்லா முத்துச்சோழன், சித்ரமுகி சத்தியவாணி முத்து, வாசுகி ரமணன், காயத்ரி சீனிவாசன் மற்றும் மலர் மரகதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திகார் சிறையில் வெரைட்டி உணவு: அமைச்சரின் அடுத்த வீடியோ!
பாஜக நடவடிக்கை: திமுகவை விமர்சித்த குஷ்பு!