உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆனார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி அமைச்சராக பதவியேற்பார் என நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
இதற்காக சுமார் 400 பேர் வரை அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரியா
மனைவி மற்றும் 5 குழந்தைகள்:கொடூர தந்தை…அதிர்ந்த தமிழகம்!
6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குத் தடை!