அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று (ஜூலை 13) விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டம் அமலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையைக் கடந்த ஜூலை 10ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.
2023-24 ஆம் ஆண்டில் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்த ரூ.7000 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கியும் அரசு ஆணையிட்டுள்ளது. இந்த உரிமைத் தொகையைப் பெறுவதற்கான தகுதியையும் வெளியிட்டது. அதுபோன்று மாவட்ட ஆட்சியர்களிடம் இதற்கான முழு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தச்சூழலில் சிறப்புத் திட்டம் அமலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமைச் செயலகத்திலிருந்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரூ.1000 உரிமை தொகை மகளிருக்கு வழங்குவது தொடர்பாக காணொளி காட்சி மூலம் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த திட்டத்துக்காக பெண்களிடம் விண்ணப்ப படிவங்களை வழங்க முகாம்களை ஏற்படுத்துவது. தன்னார்வலர்களை அடையாளம் காண்பது, விண்ணப்பங்களைப் பெறுவது போன்றப் பணிகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சிறப்புத் திட்டம் அமலாக்கத் துறை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பிரியா
உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம்: முதல்வர் அறிவிப்பு!