உதயநிதியின் எதிர்ப்பும் லண்டன் பயணமும் அமைச்சர் பதவியேற்பும்!

அரசியல்

அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். குறிஞ்சி இல்லத்தில் தனது ஆலோசகர்களுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி தனது முடிவை முதல்வரிடம் தெரிவித்தும் வருகிறார்.

அமைச்சர் மனோ தங்கராஜிடம் உள்ள ஐடி துறையை அமைச்சர் பிடிஆர் தியாகராஜனுக்கு மாற்றும் முடிவை முதல்வர் தெரிவித்தபோது கடும் ஆட்சேபனையை எழுப்பினார் உதயநிதி.

குமரி மாவட்டத்தில் கட்சியை நடத்துபவர் மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ். அவரிடம் உள்ள இலாகாவை தியாகராஜனுக்கு கொடுப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல. அவர் எப்படி கட்சியை நடத்த முடியும் என கேள்வி எழுப்பினார்.

முதல்வர் மாப்பிள்ளையிடம் பேசு என்று சொன்னபோதும் அவர் சபரீசனிடம் பேசவில்லையாம்.

ஆனால், மனோ தங்கராஜிடம் ஐடி துறையை எடுத்து தான் ஆக வேண்டும் என்றால் அவருக்கு வேறு நல்ல துறையை தர வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியும் வருகிறாராம்.

முதலில் டிஆர்பி ராஜா அமைச்சராக பதவி ஏற்கும் விழாவை வெள்ளிக்கிழமை தான் நடத்துவது என்று ஜாதக ரீதியாக முடிவு செய்து இருந்தார்களாம்.

உதயநிதி நாளை இரவு தனது குடும்பத்தாருடன் லண்டன் செல்வதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த காரணத்தினால் நாளை ( வியாழன்) பதவி ஏற்பு விழாவை நடத்துவது என்று மாற்றினார்களாம்.

வேந்தன்

சுரங்கத்துறை மாற்றம்? முதல்வர் ஸ்டாலின் – அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு: நடந்தது இதுதான்!

வெங்கட்பிரபு செய்த மிமிக்ரி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0