திமுக மாசெக்கள் கூட்டத்தில் உதயநிதி: காரணம் என்ன?

அரசியல்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் அமைந்திருக்கும் அக்கார்டு ஹோட்டலில் நடைபெறும் என்று  கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் (பிஎல்சி) பணிகள் குறித்து விவாதிக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்தான் நடக்கும். ஆனால் தற்போது அறிவாலயத்தில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கலைஞர் அரங்கத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு அதற்கு மாற்றாக முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு ஹோட்டலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.


இந்த கூட்டத்தின் இன்னொரு முக்கியமான அம்சமாக முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அவருடைய ஒன்பது மாநில இளைஞரணி துணைச் செயலாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று திமுக இளைஞரணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

 

இது குறித்து திமுக இளைஞரணி வட்டாரத்தில் விசாரித்த போது, “கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இளைஞரணி மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் ஒன்றாக நடத்த திட்டமிடப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக கலந்துகொள்வது என்றும் உதயநிதி நேரடியாக கலந்துகொள்வது என்றும் திட்டமிடப்பட்டது. இதுபற்றி மாவட்டச் செயலாளர்களுக்கு போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் நடந்த திட்டமிடப்பட்ட நவம்பர் 18 ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் அறிவிக்கப்பட்டதால் அந்த கூட்டம் கைவிடப்பட்டது.

இதன் பின் நவம்பர் 27 சென்னையில் வி.பி. சிங் சிலை திறப்பு விழா நடைபெற இருப்பதால்,  அதை ஒட்டி அனைத்து மாவட்டச் செயலாளர்களும் சென்னை வருவதைப் பயன்படுத்தி, முதல் நாளான 26 ஆம் தேதி மாசெக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் மாநாட்டு குழுச் செயலாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படலாம்.


ஏனென்றால் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டமே இளைஞர் அணி மாநாடு குறித்து விவாதிப்பதற்காகத்தான் என்பதால் சம்பந்தப்பட்ட இளைஞர் அணியின் நிர்வாகிகளை அழைக்கலாம் என்று தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மாவட்டம் தோறும் இளைஞரணி செயல்வீரர் கூட்டங்களை நடத்தி வரும் உதயநிதி சில நாட்கள் முன் சேலம் சென்று மாநாட்டுப் பந்தலை முதன்மைச் செயலாளரும் பொறுப்பு அமைச்சருமான நேருவுடன் சேர்ந்து பார்வையிட்டு வந்தார். சேலத்திலும் செயல் வீரர் கூட்டம் நடத்தினார்.  மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து மாநாட்டுக்கு எப்படி ஒத்துழைப்பு இருக்கிறது. இன்னும் எப்படியெல்லாம் ஒத்துழைப்பு தேவை என்பதை உதயநிதி மாசெக்கள் கூட்டத்தில் விளக்க வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.

 

11 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

எனவே திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் உதயநிதியும் அவருடைய இளைஞர் அணி சகாக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்து அன்று  26 ஆம் தேதி மாலையே உதயநிதி தலைமையில் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டமும் நடைபெற இருக்கிறது” என்கிறார்கள் அன்பக வட்டாரங்களில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆரா

ஏ.ஆர். ரகுமானாக சிம்பு… இளையராஜாவாக தனுஷ்… செம காம்போ..!

அமலாக்கத்துறை சம்மன்: தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *