நாளை மறுநாள் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உதயநிதி ஸ்டாலின்.
அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக மூத்த அமைச்சர்கள் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வருகின்ற 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை முதல் உதயநிதிக்கு தலைமைச் செயலகத்தில் புதிய அறை தயாராகி வருவதாக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது ராஜ் பவனின் முதன்மை செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆளுநருக்கு தமிழக முதல்வர் பரிந்துரைத்த படி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு வரும் டிசம்பர் 14ஆம் தேதி காலை 9:30 மணி அளவில் ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
தஞ்சை சேலத்துக்கு புதிய அமைச்சர்கள் ?
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!