அதிமுக – பாஜக பிரச்சினை – ஒரே காமெடி : உதயநிதி பதில்!
அதிமுக பாஜக இடையே நடப்பதை பார்க்கும் போது காமெடி சேனல் பார்ப்பது போல் இருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ஜைக்கா நிதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ராஜாஜி மருத்துவமனையை இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 20) ஆய்வு மேற்கொண்டார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இப்போது ஆய்வு செய்துள்ள மருத்துவமனை கொரோனா காலகட்டத்தினால் தாமதமாகியுள்ளது அக்டோபர் மாதம் முழுமையாக முடிவடைந்து விடும் விரைவில் திறக்கப்படும்” என தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு, “இப்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. அங்கு போய் பாருங்கள் செங்கல் மட்டும் தான் இருக்கும். எய்ம்ஸ் குறித்து ரகசியத்தை சொல்லுங்கள் என கேட்டுள்ளேன்” என கூறினார்.
தொடர்து அவர், “அதிமுக பாஜக இடையே உட்கட்சி பூசல் நடைபெற்று வருகிறது. சண்டை போட்டுக்கொள்வது போல நடிப்பார்கள். இதை காமெடி சேனல் போல் தான் பார்த்து செல்ல வேண்டும்” என விமர்சித்தார்.
இராமலிங்கம்
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!
’ஜாலி ரைடுக்கு ரெடியா?’: ராயல் என்ஃபீல்டின் அதிரடி ஆஃபர்!