முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் மாற்றம்!

Published On:

| By Selvam

முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்று உதயச்சந்திரன் இடத்தில் முருகானந்தம்? அமைச்சரவையை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றம் என்ற தலைப்பில் கடந்த மே 11-ஆம் தேதி மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படி தமிழ்நாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு இன்று உத்தரவிட்டுள்ளார்.

நாம் செய்தியில் குறிப்பிட்டபடி முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐஏஎஸ் நிதித்துறை செயலாளராகவும்… நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர மேலும் பல முக்கிய அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில் முக்கிய உயரதிகாரிகளின் இந்த மாற்றம் அரசு வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

செல்வம்

காங்கிரஸ் வெற்றி: மோடி வாழ்த்து!

விமர்சனம்: ராவண கோட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel