உதயநிதி அமைச்சராவதை தடுத்த கமல்?

அரசியல்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

நேற்று ( ஜூலை 25 ) உதயநிதியின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவீஸின் 15 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தை தமிழ்நாடு முழுவதும் விளம்பரப்படுத்த உதயநிதி எடுத்த முயற்சிகளுக்கு கமல் பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மூலம் தயாரிக்கப்படும் 54 ஆவது படத்தில் கதாநாயகனாக உதயநிதி நடிக்கவுள்ளதாக கமல் அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டும் அல்லாது உதயநிதியையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இந்த எதிர்பாராத அறிவிப்பு பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பது தான் தனது கடைசி படமாக இருக்கும் என்று உதயநிதி சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது கமல்ஹாசனுடன் RKFI 54 திட்டத்தில் இணைந்துள்ளதால், படத்தின் கூடுதல் விவரங்களை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும், இந்த வாய்ப்பை தனக்கு அளித்ததற்காக ட்விட்டரில் கமலுக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராகிவிடுவார் என்று திமுகவினர் பலரும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்தை கமல் தயாரிப்பில் நடிக்க உள்ளார் உதயநிதி. இதனால் இப்போதைக்கு உதயநிதி அமைச்சர் ஆகும் வாய்ப்பு இல்லையோ என திமுகவினர் பேச ஆரம்பித்துவிட்டனர்.

மோனிஷா

+1
0
+1
3
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *