உதயநிதி, சபரீசன் பற்றி பிடிஆர் குரலில் பரவும் ஆடியோ புயல்!
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பேசுவதாக உலாவரும் ஓர் ஆடியோ க்ளிப் தமிழ்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பும் வகையில் இருக்கிறது.
அந்த ஆடியோவில் ஆங்கிலத்தில் பேசும் உரையாடல் 28 நொடிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் அது உள்ளடக்கிய விஷயங்கள் அதிர்ச்சி ரகம்.
“உதயாவும் சபரியும் ஒரு வருடத்தில் அவர்களது மூதாதையர் வாழ்நாள் முழுதும் சம்பாதித்த பணத்தை விட அதிகமாக சம்பாதித்துவிட்டனர். இப்போது அது பிரச்சினையாகி வருகிறது. இதை எப்படி ஹேண்டில் செய்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? 10 கோடி 20 கோடி என குவித்து அது தோராயமாக ஒரு 30 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்” என்று பிடிஆர் சொல்வது போல அந்த ஆடியோவில் இருக்கிறது.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஷேர் செய்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக முதல்வரின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் குவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் செய்தியாளர் ஒருவருடன் உரையாடியிருக்கிறார். நாங்கள் டிஎம்கே ஃபைல்ஸ் வெளியிட்ட பிறகு ஒவ்வொரு நாளும் எங்களின் கூற்றுக்களை உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் வருகின்றன” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை பற்றி நிதியமைச்சர் பிடிஆர் தரப்பிடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளிவரவில்லை.
–வேந்தன்
ராகுல்காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!
கர்நாடக தேர்தல்: மேலும் 2 வேட்பாளர்களை அறிவித்த பன்னீர்