வேலைனு வந்துட்டா செந்தில்பாலாஜி: கோவையில் குளிர்வித்த உதயநிதி

அரசியல்

நேற்று  (மார்ச் 4)  கரூரைத் தொடர்ந்து இன்று  கோவையிலும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தார் கோவை பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜி. அதன்படி இன்று கோவை கொடிசியா மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை ஒட்டி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுகவின் மூத்த முன்னோடிகள் 2000 பேருக்கு பொற்கிழி வழங்கினார் அமைச்சர் உதயநிதி.

பொற்கிழி வழங்கி உதயநிதி பேசும்போது, “ எந்த மாவட்டத்துக்கு வந்தாலும் அங்கே திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை வைத்தால்தான் வருவதற்கு ஒப்புக்கொள்வேன். இந்த நிபந்தனையை நான் வைத்ததில் இருந்து  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலில் 200 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபாய், அடுத்து புதுக்கோட்டையில் மூத்த முன்னோடிகள் 1500 பேருக்கு தலா பத்தாயிரம் என மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த ஒரு வருடத்தில் மட்டும் 20 மாவட்டங்களில் வழங்கியிருக்கிறோம். நேற்று கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று 1270 பேருக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் அளித்தார். தன் மாவட்டத்தை விட அதிகமாக இன்று கோவை மாவட்டத்தில் 2ஆயிரம் முன்னோடிகளூக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.

இந்தியாவிலேயே எந்த இயக்கமும் எடுக்காத ஓர் முயற்சி இது.

Udayanidhi praised Senthilbalaji

‘வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன்’என்று சொல்வார்கள். ஆனால் வேலைனு வந்துட்டா அதுவும் தேர்தல் வேலைனு வந்துட்டா அது செந்தில்பாலாஜிதான். மற்ற மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் பொறாமைப்படும் அளவுக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்,.

அவரிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தால் அவரும் தூங்க மாட்டார், மற்றவர்களையும் தூங்கவிட மாட்டார். இதை ஏதோ புகழ்ச்சிக்காக சொல்லவில்லை. உள்மனதில் இருந்து சொல்கிறேன். செந்தில்பாலாஜியிடம் எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் 100 சதவிகித வெற்றிதான்” என்று செந்தில்பாலாஜியை புகழ்ந்தார் உதயநிதி ஸ்டாலின்.தொடர்ந்து பேசிய உதயநிதி, “

தமிழ்நாடு முழுக்க ஜெயித்தாலும் நாம் கோவையில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனாலும் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சி அமைத்து ஆறு முறை கோவைக்கு வந்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி கொடுத்தால் மாதம் ஒருமுறை வருவேன் என்று நான் சொல்லியிருந்தேன். அதன்படியே செந்தில்பாலாஜி தலைமையில் 97% வெற்றியைக் கொடுத்தீர்கள். இதற்கான முழு பெருமையும் மூத்த முன்னோடிகளுக்குத்தான்.

நமது 20 மாத கால அரசுக்கு கிடைத்த வெற்றிதான் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல். ஈரோடு பிரச்சாரம் முடித்ததும் தலைவர் என்னிடம், ‘எப்படி இருக்கு கள நிலவரம்? எத்தனை வாக்கு வித்தியாசம் வரும்?’ என்று கேட்டார்.  நான், ‘40 லேர்ந்து 45 ஆயிரம் வித்தியாசத்துல வெற்றி உறுதினு சொன்னேன். தலைவர் ஒரே ஒரு நாள் தான் போனார். ஆனால் எடப்பாடி ஈரோட்டில்தான் குடியிருந்தார்.  தலைவர் பிரச்சாரம் செய்து விட்டு வந்ததும் நான் அவரிடம் நீங்க சொல்லுங்க என்று கேட்டேன்.  60 லேர்ந்து  65 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்று சொன்னார். அதுதான் நடந்தது.

நான் கூட ஈரோடு இடைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலேர்ந்து அதிமுக விலகி வந்துவிடுமோனு பயந்தேன். ஆனால் வரலை. அதிமுக-பாஜக கூட்டணி இருக்கும் வரை நமது வெற்றி உறுதி. வெறுப்பு அரசியலை பேசும் பாஜகவை தமிழக மக்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். 

பாஜக என்பது ஒரு ஆடியோ வீடியோ கட்சி. நீ என்னைப் பத்தி பேசினா உன் ஆடியோவை விட்டுருவேன். நீ என்னைப் பத்தி பேசினா வீடியோவை விட்ருவேன். இன்னிக்கு கூட ஒருத்தர் பாஜகவுலேர்ந்து வெளிய போயிருக்காரு.  ‘எங்கள் தலைவர் ஒரு 420’  என சொல்லிவிட்டு  போயிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட கட்சிதான் பாஜக” என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

வேந்தன்

மாநில அரசியலே தெரியாது… இதில் தேசிய அரசியல் எதற்கு?: எடப்பாடி கிண்டல்!

ஆளுநருக்கு எதிராக மக்கள்திரள் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்

+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *