டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இன்று சந்தித்தார்.
இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் கலந்துகொள்ளும் கேலோ இந்தியா போட்டி வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதன் இறுதி போட்டி ஜனவரி 31 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார் அமைச்சர் உதயநிதி. விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 4) பிற்பகல் பிரதமர் இல்லத்துக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் உதயநிதி. அப்போது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார்.
தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 6:15 மணிக்கு சந்திக்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகர்: கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பரபரப்பு!
விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்!
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்: தேதி அறிவிப்பு!