தமிழ்நாடு சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று(ஏப்ரல் 11) நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின்போது பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இது தொடர்பாக பேசிய வேலுமணி, “கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் கொடுக்கப்பட்டது. தற்போதும் 300 முதல் 400 பாஸ்கள் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை.
அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை. எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”4 வருசமா சேப்பாக்கத்துல ஐ.பி.எல் போட்டியே நடக்கல, யாருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தீங்கனு தெரியல..என்னோட சொந்த செலவுல 150 கிரிக்கெட் விளையாடும் வீரர்களை டிக்கெட் வாங்கி மைதானத்திற்கு அழைத்து செல்கிறேன்.
ஐபிஎல்லை நடத்துவது உங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான், அவரிடம் சொல்லி டிக்கெட் வாங்கி கொடுங்க..நாங்க சொன்னா அவரு கேட்க மாட்டாரு..நீங்க சொன்னா கேப்பாரு.. எனக் கூற, முதல்வர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தோழமைக் கட்சிகளுடன் உறவு: சோனியா அறிவிப்பு!
நண்பர் என்று சொன்னதிலேயே மகிழ்ச்சியடைந்தேன்: சசிகுமார் நெகிழ்ச்சி!