வைஃபை ஆன் செய்ததும் பிப்ரவரி 16ம் தேதி முதல் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்கள் கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்ட வீடியோ லிங்குகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் வேகவேகமாக தயாராகிக் கொண்டிருக்கையில் ஆளுங்கட்சியான திமுக தனது பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது. இதனை இன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினும் அறிவித்துவிட்டார்.
இன்று தனது சமூக தளப் பக்கத்தில், ‘நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டது திமுக. நாட்டின் தென்முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்த குரல் வடக்கிலும் எதிரொலிக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டாலின்.
பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பிரச்சார களத்தில் இறங்கிவிட்ட நிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் எப்போது பிரச்சார களத்துக்கு வரப்போகிறார் என்று கேள்வி இயல்பாகவே எழுந்திருக்கிறது.
இது குறித்து திமுக தலைமை வட்டாரங்களில் விசாரித்த போது, ’கடந்த ஜனவரி 21ஆம் தேதி சேலம் இளைஞர் அணி மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், ‘இங்கே கூடியிருக்கிற லட்சக்கணக்கான இளைஞர்களை பார்த்து எனக்கு 20 வயது குறைந்து விட்டது’ என்று உற்சாகமாக பேசினார்.
ஆனாலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடுமையான வெப்பம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பாயின்ட் பாயின்ட்டாக திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்யும் வழக்கமான உத்தியைத் தவிர்க்குமாறு அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவர்களின் அறிவுரை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை அமைப்பதில் ஸ்டாலின் முக்கிய பங்காற்றியிருப்பதால், இந்தியா முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யவும் அவருக்கு பல்வேறு தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த காரணங்களின் அடிப்படையில் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டில் ஊர் ஊராக சென்று பாயின்ட் பாயின்ட்டாக சென்று பிரச்சாரம் செய்ய வைத்து விட்டு தேசிய அளவிலான பிரச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்று ஸ்டாலின் கருதியிருப்பதாக சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்.
எனவே இந்த மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழகம் முழுவதும் உதயநிதி சுற்றி சுழல்வார், ஸ்டாலின் பொதுக்கூட்டம் போன்ற முக்கியமான பிரச்சார மையங்களில் வந்து பேசுவார் என்றும் டெல்லி, கொல்கத்தா, மும்பை , பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்லலாம் என்றும் கூறுகிறார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களையும் அழைத்து வருவது என்ற திட்டமும் திமுகவிடம் இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டுக்கு உதயநிதி தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு தாண்டி இந்திய அளவிலும் ஸ்டாலின் என்பது தான் திமுகவின் இப்போதைய பிரச்சார பிளான்” என்ற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உழைக்கும் எறும்பு தமிழ்நாடு,.. ஊதாரி சில்வண்டு உத்திரப்பிரதேசம்- கனிமொழி சொன்ன குட்டி ஸ்டோரி!
தளபதி 69: தெலுங்கு இயக்குநரை ‘லாக்’ செய்த விஜய்?
ஏதே! 🏃♂️🏃♂️🏃♂️🏃♂️ இந்தியா கூட்டனிய அமைப்பதில் முக்கிய பங்காற்றினாரா!
இதை எழுதும் போது சத்தியமா சிரிக்கலன்னு சொல்லுயா!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 லட்சணம் பாத்தில்ல…போய் நல்லா எழுதி பழகுயா! 🤭🤭🤭🤭🤭🤭