உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித்

அரசியல்

உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக் கொண்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நேற்றுடன்(ஆகஸ்ட் 26) ஓய்வு பெற்றார்.

இதையடுத்து இன்று யு.யு.லலித் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட யு.யு. லலித் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித் 1983-ம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கியவர்.

பெரிதும் பேசப்பட்ட 2 ஜி அலைக்கற்றை வழக்கில் வழக்கறிஞராக பணியாற்றிய லலித் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாகி பின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட 2 ஆவது நபர் ஆவார்.

U.U. Lalit was sworn

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள லலித் உச்சநீதிமன்ற தினசரி அலுவல் நேரத்தை முன்கூட்டியே தொடங்க திட்டமிட்டுள்ளார்.

உதாரணமாக காலை 9 மணிக்கு துவங்கும் நீதிமன்ற அலுவல் நடவடிக்கைகள் காலை 11.30 மணி வரையும் அதன் பிறகு அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு மீண்டும் 12 மணிக்கு துவங்கி நண்பகல் 2 மணி வரை நீதிமன்ற அவை நேரத்தை அமலுக்கு கொண்டு வரலாம் என தெரிவித்திருந்தார்.

பள்ளி குழந்தைகள் காலை 7 மணிக்கு பள்ளி செல்லும் போது நம்மால் நீதிமன்றத்திற்கு காலை 9 மணிக்கு வர முடியாதா? என சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களிடம் கேட்டிருந்தவர் நீதிபதி லலித் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

 உச்சநீதிமன்றத்தின் 49 வது தலைமை நீதிபதி… யார் இந்த யு.யு.லலித்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.