ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், விருப்ப மனு பெறுவது, இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக பன்னீர் செல்வம் இன்று (ஜனவரி 28) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஈரோடு தேர்தல் களத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி நிற்குமா, ஈபிஎஸ் அணி நிற்குமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரு அணிகளும் தனித்தனியே தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களாகத் தொடர் ஆலோசனையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி நேற்று இரட்டை சிலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
அதுபோன்று ஈரோடு கிழக்கில் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளார்.
இந்தச்சூழலில் அதிமுக பொதுக்குழு தொடர்பாகப் பன்னீர் செல்வம் தாக்கல் செய்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர் செல்வத்தின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்,
இதில் தங்கள் தரப்பு வேட்பாளரை இறுதி செய்வது, விருப்ப மனு பெறுவது, இரட்டை இலை சின்னம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
“ஜெய் ஸ்ரீ ராம் தான் ஒலிக்கும்”: பதான் பற்றி கங்கணா
மாற்றுத்திறனாளிகள் புணர்வாழ்வு மையம்: திறந்து வைத்த முதல்வர்