இரட்டை இலை… பக்கெட்… : தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புதிய மனு!

Published On:

| By Kavi

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகின்றனர்.

சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் அதே சமயம் இரட்டை இலை சின்னத்துக்காக நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகி வருகிறார்.

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, “இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்புக்கு தடையில்லை” என்று நேற்று (மார்ச் 25) தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பில் அவரது ஆதரவாளர் புகழேந்தி தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று(மார்ச் 26) ஒரு மனு கொடுத்துள்ளார்.

அதில், ”அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கக் கூடாது. இரட்டை இலை சின்னத்தை தனது தரப்புக்கு கொடுக்க வேண்டும்.
இல்லை என்றால் அந்த சின்னத்தை முடக்க வேண்டும். அப்படி முடக்கும் பட்சத்தில் பக்கெட் சின்னத்தை ஒதுக்கவேண்டும்”  என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் அவரை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் பெயர் கொண்ட மேலும் 4 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஜிவி – ஐஸ்வர்யா குத்தாட்டம்..! டியர் புது பாடல் வெளியானது..!

ராம் சரண் பிறந்த நாள் ஸ்பெஷல்.. கேம் சேஞ்சர் அப்டேட்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel