ஒரு பக்கம் கூட்டணிக் கட்சியினருடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்யும் வேலையையும் செய்து வருகிறது.
திமுக வேட்பாளர் பட்டியலைப் பொறுத்தவரை அதில் கடந்த முறை போட்டியிட்டு எம்.பியாக இருப்பவர்களில் இரண்டு பேருக்கு மீண்டும் சீட் கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவதாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் ரமேஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கடலூர் எம்.பி ரமேஷுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிகிறது.
இரண்டாவதாக பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பியான சண்முகசுந்தரம். இவருக்கும் மீண்டும் சீட் வழங்கப்படாது என்ற தகவலும் திமுக வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
12 தொகுதி கேட்கும் காங்கிரஸ்..7-ஐத் தாண்டாத திமுக..என்ன நடக்கிறது?
கோவையை கேட்கும் சி.பி.எம்..ஒத்து வராத திமுக..காரணம் என்ன?