தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது: அதிமுகவுக்கு முதல்வர் பதில்!

Published On:

| By Kavi

எதிர்க்கட்சிகள் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை என்று அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ‘தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினசரி துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை நடுநிலையாகச் செயல்படவில்லை. சபாநாயகர் பாரபட்சமாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வருகிறார்.

இன்றைய கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனை குறித்துப் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது தடுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று அதிமுக கொறடா வேலுமணி சபாநாயகரிடம் முறையிட்டார்.

இதற்கு விளக்கமளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற விவாதங்களை ஒளிபரப்புவது அந்தந்த தொலைக்காட்சிகளின் விருப்பத்தைப் பொறுத்தது.

இதை ஒளிபரப்ப வேண்டும், இதை ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த உண்மையை எதிர்க்கட்சிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

இன்றைய கூட்டத்தொடரின் போதும், எதிர்க்கட்சியினர் பேசுவதை ஒளிபரப்பு செய்யவில்லை என அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பிரியா

விருத்தாசலம் சிறுமி விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

செக் மோசடி: நடிகர் விமலுக்கு நீதிமன்றம் அபராதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share