நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தலைவர் விஜய் இன்று (நவம்பர் 8) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாட்டிற்கு முன்பு வரை விஜய்யை ஆதரித்து சீமான் பேசி வந்தார். மாநாட்டின் போது திராவிடமும் தமிழ் தேசியமும் எனது இரண்டு கண்கள் என்று விஜய் பேசியதற்கு சீமான் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு விஜய் தரப்பில் இருந்து “சீமான் அவரது இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் அதை தங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை” என தவெக நிர்வாகி சம்பத் குமார் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் தான் தவெக தலைவர் விஜய் “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக சீமான் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் இணையத்தில் காரசாரமான கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில், சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
300 கி.மீ. தரும் நானோ கார் எலக்ட்ரிக் வெர்சன்: ரத்தன் டாடாவின் கனவு நனவானது!
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் முடக்கம்: லிஸ்ட் போட்ட எடப்பாடி
தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரன் எவ்வளவு தெரியுமா?
அன்பு சகோதரர்களா! உங்களோட சொந்த மத ஓட்டுக்காக ரெண்டு பேரும் அடிச்சிகிட்டு சாகாதீங்கடா..😆😆😆😆😆