தவெக மாநாடு முடிந்து நேற்று இரவு ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு திரும்பியதால் விக்கிரவாண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் லட்சக்கணக்கான தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் திரண்டனர்.
நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் நிகழ்ச்சியை நிறைவு செய்து அக்கட்சித் தலைவர் விஜய் மாநாட்டு திடலில் இருந்து புறப்பட்டு சென்றார். மேடையில் தனக்கு கொடுத்த பரிசுகளை விஜய் கையோடு எடுத்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய்யை தொடர்ந்து லட்சக்கணக்கான தொண்டர்களும் ஒரே நேரத்தில் அங்கிருந்து கிளம்பினர்.
இதன் காரணமாக சென்னை திருச்சி நெடுஞ்சாலையிலும் விழுப்புரம் செல்லும் வழித்தடத்திலும் திண்டிவனம் செல்லும் வழித்தடத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதை காண முடிந்தது. இரவில் சாரை சாரையாக தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நடந்து செல்வதையும் பார்க்க முடிந்தது.
ஐந்து கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசல் pic.twitter.com/uVGI46k1JA
— localnews (@virallocal123) October 27, 2024
இந்த வழியில் பிற வாகனங்கள் பெரும்பாலும் செல்லாத நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் சுமார் 8கிமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விக்கிரவாண்டியில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலை, உளுந்தூர்பேட்டை, ஓங்கூர், திண்டிவனம் சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
பெரும்பாலானோருக்கு வாகனங்கள் கிடைக்காமல் அவர்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் காத்திருந்தனர். சில தொண்டர்களும், பொதுமக்களும் சாலை அருகே உள்ள கடைகளுக்கு முன் படுத்து உறங்கி இன்று அதிகாலை கிளம்பி சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!
பாதாள சாக்கடையில் மூழ்கியவரைக் காப்பாற்ற சென்ற இளைஞரும் பலி!